வருகிற 10-ந் தேதி கோனேரிராஜபுரம் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் 100 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது


வருகிற 10-ந் தேதி கோனேரிராஜபுரம் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் 100 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது
x
தினத்தந்தி 1 May 2019 10:30 PM GMT (Updated: 1 May 2019 6:54 PM GMT)

கோனேரிராஜபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் 100 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 10-ந் தேதி நடக்கிறது.

திருவிடைமருதூர்,

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோனேரிராஜபுரம் கிராமத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கைலாசநாதர், சர்வமங்கள மோகன குஜாம்பிகை அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. அதன் பின்னர் பராமரிப்பின்றி கோவில் சிதிலம் அடைந்து காணப்பட்டது. மேலும் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி 100 ஆண்டுகளாகி விட்டது. இதையடுத்து கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த கோனேரிராஜபுரம் கிராம மக்கள் முடிவு செய்தனர்.

கும்பாபிஷேகம்

அதன்படி கோவிலில் திருப்பணிகள் பல லட்சம் ரூபாய் செலவில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 100 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 10-ந் தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற 7-ந் தேதி கணபதி ஹோமம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கைலாசநாதர் சமய சேவா பொது நல மன்றம் மற்றும் கோனேரிராஜபுரம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Next Story