புயல் சின்னம்; தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


புயல் சின்னம்; தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 2 May 2019 4:45 AM IST (Updated: 2 May 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

ராமேசுவரம்,

வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று தனுஷ்கோடி கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 10 அடி உயரத்துக்கும் மேலாக அலைகள் சீறி பாய்ந்தன.

இதனையொட்டி அங்கு கடலோர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சுற்றுலா பயணிகளிடமும் பொதுமக்களிடமும் கடலில் குளிக்கக்கூடாது என எச்சரித்ததுடன், கடலில் இறங்கி செல்பி எடுக்கவும் தடை விதித்தனர்.

பலத்த காற்றின் காரணமாக கோதண்டராமர் கோவில் முதல் தனுஷ்கோடி வரையிலும் சாலை முழுவதும் மணல் மூடியிருந்தது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோக்கள் மிகவும் சிரமப்பட்டன.

1 More update

Next Story