ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி வீட்டில் தங்க நகைகள் திருடிய பெண் உள்பட 2 பேர் கைது


ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி வீட்டில் தங்க நகைகள் திருடிய பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 May 2019 10:15 PM GMT (Updated: 1 May 2019 8:35 PM GMT)

திருச்சி உறையூரில், ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி வீட்டில் தங்க நகைகளை திருடிய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி உறையூர் பாத்திமாநகரை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 71). இவர் மின்வாரிய அலுவலகத்தில் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், கடந்த 21-ந் தேதி திருச்சியில் இருந்து மதுரைக்கு சென்றார். பின்னர் 22-ந் தேதி மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 33½ பவுன் நகைகள், வைரத்தோடு, மடிக்கணினி, கேமரா ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து உறையூர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் மாரிமுத்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நேற்று காலை உறையூர் சாலைரோட்டில் உள்ள டீக்கடை முன்பு நின்று கொண்டிருந்த பெண் உள்பட 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், தஞ்சை மாவட்டம் திருவையாறு கீழதிருப்பந்துருத்தியை சேர்ந்த மதியழகன்(45), உறையூர் பாத்திமாநகரை சேர்ந்த ஜெகதீஸ்வரி(39) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் தான் மாரிமுத்து வீட்டில் நகைகள் மற்றும் பொருட்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள், மடிக்கணினி, கேமரா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 

Next Story