மாற்றுத்திறனாளிகளுக்கான அகில இந்திய அளவிலான செஸ் போட்டி திருச்சியில் தொடங்கியது
மாற்றுத்திறனாளிகளுக்கான அகில இந்திய அளவிலான செஸ்போட்டி திருச்சியில் நேற்று தொடங்கியது.
திருச்சி,
மாற்றுத்திறனாளிகளுக்கான அகில இந்திய அளவிலான செஸ்போட்டி திருச்சி ராமலிங்கநகர் தெற்கு விஸ்தரிப்பில் உள்ள ஒரு மையத்தில் நேற்று தொடங்கியது. போட்டியில் தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட பிறமாநிலங்களில் இருந்தும் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் 37 பேர் பங்கேற்றுள்ளனர்.
இதில் கடந்த 2017-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சசிகாந்த், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற திருச்சியை சேர்ந்த ஜெனித்தா ஆண்டோ ஆகியோரும் கலந்து கொண்டனர். பொதுப்பிரிவு மற்றும் பெண்கள் பிரிவு என 2 பிரிவுகளில் போட்டி நடக்கிறது.
முதல் நாளான நேற்று 3 சுற்று போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-வது நாளில் மேலும் 3 சுற்று போட்டிகள் நடைபெற இருக்கிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது.
இதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். முன்னதாக போட்டி தொடக்க விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story