காவிரி டெல்டாவில் ஆறுகள், வாய்க்கால்களை உடனே தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், வாய்க்கால்களை உடனே தூர்வார வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாபநாசம்,
காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரம் மேட்டூர் அணை ஆகும். டெல்டாவில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம்.
கடந்த பல ஆண்டுகளில் மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் காலதாமதமாகவே தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்கு குறைந்தபட்சம் 90 அடி நீர்மட்டம் இருந்தால் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது சாத்தியமாகும். இதனால் இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் விவ சாயிகள் கவலையில் உள்ளனர்.
தூர்வாரும் பணி
காவிரி பாசன விவசாயிகள் கவலையை போக்க வருண பகவான் கைகொடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் நம்பிக்கை. எனவே காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்களை நவீனப்படுத்தும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். கிளை வாய்க்கால்களில் ரெகுலேட்டர்கள், பாசன மதகுகள் ஆகிய பணிகளை உடனே முடிக்க வேண்டும். தஞ்சை காவிரி டெல்டாவில் காவிரி ஆற்றில் தண்ணீர் வருவதற்குள் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story