திருப்பூரில் 120 கிலோ புகையிலை பொருட்கள், கார் பறிமுதல் - மொத்த வியாபாரி உள்பட 2 பேர் கைது
திருப்பூரில் புகையிலை பொருட்கள் விற்ற மொத்த வியாபாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 120 கிலோ புகையிலை பொருட்கள், கார் ஆகியவற்றை பறி முதல் செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூரில் புகையிலை பொருட்கள் விற்ற மொத்த வியாபாரி உள்பட 2 பேரை கைது செய்தது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் பெரிச்சிப்பாளையம் முனிசிபல் லே-அவுட்டில் ஒரு மளிகைக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக நேற்று காலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று சோதனை நடத்தினார்கள். அங்கு புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. கடையின் உரிமையாளரான ஜெய்சங்கரிடம்(வயது 51), புகையிலை பொருட்களை எங்கிருந்து வாங்கி வருகிறீர்கள்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ஊத்துக்குளி அருகே வெள்ளியம்பாளையத்தை சேர்ந்த மொத்த வியாபாரி சந்திரசேகர்(49) என்பவர் கார் மூலமாக புகையிலை பொருட்களை கொண்டு வந்து கடை, கடையாக விற்பனை செய்வதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்திரசேகர் தனது காரில் புகையிலை பொருட்களை பண்டல், பண்டல்களாக கொண்டு வந்தபோது சிக்கினார்.
இந்த சோதனையில் மொத்தம் 120 கிலோ புகையிலை பொருட்கள், அதை விற்பனை செய்ய பயன்படுத்திய சந்திரசேகரின் கார், ரூ.5,250 ஆகியவற்றை பறிமுதல் செய்த னர். இதன் மொத்த மதிப்பு ரூ.1½ லட்சமாகும். பின்னர் சந்திரசேகர், ஜெய்சங்கர் ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Related Tags :
Next Story