தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு பா.ஜனதா-சிவசேனா அதிக தொகுதிகளை கைப்பற்றும்
48 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட மராட்டியத்தில் அனைத்து கருத்துகணிப்புகளும் பா.ஜனதா- சிவசேனா கட்சிகளுக்கு சாதகமாகவே வந்துள்ளது.
மும்பை,
‘ஆஜ் தக் ஆக்சஸ் மை இந்தியா’ வெளியிட்ட கருத்துக்கணிப்பில் பா.ஜனதா கூட்டணி 38-ல் இருந்து 42 இடங்களையும், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் 6 முதல் 10 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
‘ரிபப்ளிக்’ சேனல் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் 34 இடங்களில் பா.ஜனதா-சிவசேனாவும், 14 இடங்களில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரசும் வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது. ‘டைம்ஸ் நவ்’ வெளியிட்ட கருத்துக்கணிப்பில் பா.ஜனதா-சிவசேனா கட்சிகள் 38 இடங்களையும், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் 10 இடங்களையும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story