வாக்கு எண்ணிக்கை: புதுவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையை தொடர்ந்து புதுவையில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
புதுச்சேரி,
புதுவை நாடாளுமன்ற தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குபதிவு எந்திரங்கள் லாஸ்பேட்டை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டு இருந்தன. நேற்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் காவல்துறையில் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு இருந்தது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களை ஒட்டிய சாலை பகுதிக்கு யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அந்த பகுதிக்கு யாரும் செல்ல முடியாதபடி போலீசார் தடுப்புகள் அமைத்தனர். அதன் காரணமாக அந்த பகுதி சாலைகள் முழுஅடைப்பு நடந்ததுபோல் வெறிச்சோடி காணப்பட்டது.
சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா தலைமையில் 11 போலீஸ் சூப்பிரண்டுகள், 24 இன்ஸ்பெக்டர்கள், 40 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 590 காவலர்கள் மற்றும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா நேற்று காலை அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டார். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு புதுவை முழுவதும் நேற்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி வந்தனர்.

Related Tags :
Next Story