பாதுகாப்பு வழங்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் காதல் திருமண ஜோடி மனு


பாதுகாப்பு வழங்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் காதல் திருமண ஜோடி மனு
x
தினத்தந்தி 26 May 2019 4:00 AM IST (Updated: 26 May 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு வழங்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் காதல் திருமண ஜோடி மனு.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மேலாத்துக்குறிச்சி கீழத்தெருவை சேர்ந்தவர் நதியா(வயது23). பி.எஸ்சி. பட்டதாரி. இவர் தனது காதல் கணவர் வீரமணியுடன் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று வந்தார். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனிடம் நதியா மனு ஒன்றை அளித்தார். அதில், நான் வீரமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தே திருமணம் செய்து கொண்டுள்ளோம். எனது தந்தை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்களுடன் சேர்ந்து எங்களை தேடி வருகிறார். எனது கணவரையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவோம் என மிரட்டி வருகின்றனர். எனவே எனக்கும், எனது கணவர் மற்றும் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை படித்து பார்த்த போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story