திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் காங்கிரீட் கல் வைத்த வாலிபர் கைது
திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த காங்கிரீட் கல் மீது முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதிய வழக்கில் போலீசார் துரிதமாக விசாரணை மேற்கொண்டு வாலிபரை கைது செய்தனர்.
விருதுநகர்,
அந்த பகுதியில் காலி மதுபாட்டில்கள், உண்வு பொட்டலங்கள் சிதறிக்கிடந்தன. இதனால் குடிபோதையில் யாரேனும் காங்கிரீட் கல்லை வைத்தார்களா அல்லது ரெயிலை கவிழ்க்க நடந்த சதியா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு சரத்குமார் தாக்கூர் நேற்று அந்த பகுதிக்கு வந்து பார்வையிட்டார். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் குருசாமி ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு துரிதமாக விசாரணை நடந்தது.
இந்த சம்பவம் அருகே ராணுவத்தில் பணிக்கு சேர விரும்புவோருக்கு பயிற்சி அளிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு படிக்கும் யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகம் கிளம்பியது. இதைத்தொடர்ந்து அங்கு படிக்கும் மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்,
கைது அங்கு படித்த கள்ளிக்குடி அருகே திருமால் என்ற கிராமத்தை சேர்ந்த திருவேட்டை என்பவரது மகனான அழகுமலை கண்ணன்(வயது19) என்பவரிடமும் விசாரணை நடந்தது. அப்போது அவர், விளையாட்டாக தண்டவாளத்தில் காங்கிரீட் கல்லை வைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் வாலிபர் அழகுமலை கண்ணன் அப்போது குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவரை கைது செய்த போலீசார் விருதுநகர் முதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.Related Tags :
Next Story