டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.2½ லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
மெலட்டூர் அருகே டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.2½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மெலட்டூர்,
தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே உள்ள தென்னஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் மாதவன்(வயது 40). இவர் பாபநாசம் அருகே வழுத்தூரில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு மாதவன் கடையில் வியாபாரத்தை முடித்துக்கொண்டு மது விற்பனை மூலம் கிடைத்த ரூ.2½ லட்சத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
மெலட்டூர் அருகே ரெங்கநாதபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஒரு மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 3 பேர் மாதவனை பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் திடீரென மாதவன் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் அவருடைய முகத்தில் மிளகாய் பொடியை தூவினர்.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மாதவனின் தோள்பட்டை பகுதியில் மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர். இதையடுத்து மாதவன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளில் இருந்த பணப்பையை கொள்ளையடித்து விட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த மாதவன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மெலட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.2½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மெலட்டூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story