குடோன்களில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி குட்கா பறிமுதல் 3 பேர் சிக்கினர்; பரபரப்பு தகவல்
மார்த்தாண்டம் அருகே குடோன்களில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் சிக்கி உள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளன.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் குட்கா விற்பனை அமோகமாக நடந்து வந்தது. வெளி மாநிலங்களில் இருந்து இங்கு கொண்டு வந்து குடோன்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் வந்தன.
அதன்அடிப்படையில் போலீசார் குட்கா விற்பனை செய்பவர்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அதன்பேரில் மார்த்தாண்டம் போலீசார் குட்கா பதுக்கி விற்பனை செய்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேரை கைது செய்தனர். அவர்களது கூட்டாளி முகமதுஅலி என்பவர் முன்ஜாமீன் பெற்றார். இதற்கிடையே முன்ஜாமீன் பெற்ற முகமது அலியை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
நேற்று மதியம் தக்கலை தனிப்படை போலீசார் முகமது அலி பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
அதாவது மார்த்தாண்டம் மார்க்கெட் பகுதியில் மொத்த வியாபார கடை நடத்தி வரும் நல்லூர் பகுதியை சேர்ந்த சத்தியநேசன் (வயது 65), அவருடைய மகன் அனந்த சத்யா (34) ஆகியோரிடம் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
முகமது அலி கொடுத்த தகவலின் பேரில் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் மார்த்தாண்டம் மார்க்கெட் பகுதியில் உள்ள சத்தியநேசனின் கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஏராளமாக இருந்தன. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் சத்தியநேசனுக்கு குட்கா பொருட்கள் எப்படி கிடைத்தன. அவருக்கு வினியோகம் செய்தது யார்? என்பது குறித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது தொழில் அதிபர் ஒருவருக்கு சொந்தமான 2 குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. உடனே போலீசார் சத்தியநேசனை அழைத்துக் கொண்டு அவர் கூறிய குடோன்களுக்கு சென்றனர்.
அங்கு போலீசார் கண்ட காட்சி அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அதாவது அந்த குடோன்களில் மூடை மூடையாக குட்கா பொருட்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அதன் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று கூறினர்.
இதுதொடர்பாக முகமது அலி, சத்தியநேசன், அவருடைய மகன் அனந்தசத்யா ஆகியோரை பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சத்தியநேசனுக்கு எங்கிருந்து இவ்வளவு குட்கா பொருட்கள் வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story