தஞ்சை ராஜீவ்நகர், எஸ்.என்.எம்.ரகுமான் நகரில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு
தஞ்சை ராஜீவ்நகர், எஸ்.என்.எம்.ரகுமான் நகரில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினர்.
தஞ்சாவூர்,
தஞ்சை ஜெபமாலைபுரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு உள்ளது. மாநகரில் 51 வார்டுகளிலும் நாள்தோறும் சேகரிக்கப்படும் 120 டன் குப்பைகளும் இந்த கிடங்கில் தான் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த குப்பைக்கிடங்கு குப்பைகளால் நிரம்பி விட்டது. குப்பைக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தொடர்ந்து அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை நகரில் 14 இடங்களில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை ராஜீவ்நகரில் சிறுவர்களுக்கான பூங்காவில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு ஆரம்பகட்ட பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்றுகாலை ராஜீவ்நகருக்கு பொக்லின் எந்திரத்துடன் மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர்.
அங்கு குழிதோண்டும் பணி நடைபெற்றது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்கக்கூடாது என கூறி பொக்லின் எந்திரத்தையும், அதிகாரிகளையும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அருகில் நீர்த்தேக்க தொட்டி மற்றும் குடியிருப்புகள் உள்ளதால் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் இப்பகுதியில் அமைக்கக்கூடாது. அப்படி மீறி அமைத்தால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என கூறினர். மக்களின் கருத்தை மேல் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறிய அதிகாரிகள் பணியை பாதியில் நிறுத்திவிட்டு பொக்லின் எந்திரத்துடன் திரும்பி சென்றனர்.
அதேபோல தஞ்சை கீழவாசல் எஸ்.என்.எம்.ரகுமான் நகரில் உள்ள பூங்காவில் தரம் பிரிக்கும் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பூங்கா அருகே ஒன்று திரண்டனர். இதை அறிந்த நீலமேகம் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர், இந்த இடத்தில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்கக்கூடாது என மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பணியும் பாதியில் நிறுத்தப்பட்டது.

Related Tags :
Next Story