மானாமதுரை அ.ம.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 3 பேர் கைது
மானாமதுரை அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் கொலை வழக்கில் நேற்று 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மானாமதுரை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அ.ம.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்தவர் சரவணன் (வயது 36). இவர் ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஊமைத்துரையின் மகன் ஆவார். மானாமதுரை பாண்டியன் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த சரவணன் கடந்த 26-ந் தேதி காலை கல்குறிச்சி பாலத்தில் நடைபயிற்சி சென்ற போது, கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன் மற்றும் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று மதுரை கரிமேடை சேர்ந்த அன்புதாசன் மகன் அய்யப்பன் (32), திருப்புவனம் குமார் மகன் பாலாஜி (32), வேலூரை சேர்ந்த முருகேசன் மகன் பழனி (35) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து மானாமதுரை கோர்ட்டில் நீதிபதி முத்துஇசக்கி முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறுகையில், சரவணனின் தந்தை ஊமைத்துரையை முன்விரோதம் காரணமாக ஒரு நபர் வெட்டினார். அதற்கு பழிக்குப்பழியாக 2009-ம் ஆண்டு மதுரை மத்திய சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வந்த அந்த நபரை சரவணன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டினர். இந்த சம்பவத்தில் சரவணனுடன், தங்கராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார். இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று, இந்த மாதம் தீர்ப்பு வருகிறது.
இந்தநிலையில் தங்கராஜூக்கு, சரவணன் எந்த உதவியும் செய்யவில்லையாம். அவர் மட்டும் அடுத்தடுத்து பேரூராட்சி கவுன்சிலர், அரசு ஒப்பந்தகாரர் என வளர்ச்சியடைந்தும், தனக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை என்ற கோபத்தில் தங்கராஜ் தனது கூட்டாளிகளுடன் சரவணனை வெட்டி கொலை செய்துள்ளார்.
இதற்கு பாலாஜி, பழனி ஆகியோர் துப்பு கொடுத்தது தெரியவந்தது. அதனால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு முக்கிய குற்றவாளியான தங்கராஜ் மற்றும் தொத்தல் என்ற முத்துசெல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டால் தான் உண்மையான காரணமும், மேலும் கொலை சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்பதும் தெரியவரும் என்றனர்.

Related Tags :
Next Story