மின்சாரம் பாய்ந்து சிறுவன் இறப்புக்கு காரணமான காற்றாலை உரிமையாளர் மீது நடவடிக்கை, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
மின்சாரம் பாய்ந்து சிறுவன் இறப்புக்கு காரணமான காற்றாலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தேனி,
தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று ஆண்டிப்பட்டி தாலுகா ரோசனப்பட்டியை சேர்ந்த முத்துக் காளை என்பவர் 50-க்கும் மேற்பட்ட தனது உறவினர்களுடன் வந்து மனு கொடுத்தார்.
அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது மகன் தவமுத்து (வயது 15). திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்து விடுமுறைக்கு ரோசனப்பட்டிக்கு வந்திருந்தான். இந்நிலையில் கடந்த மாதம் 31-ந்தேதி தனது பெரியாப்பாவை பார்ப்பதற்காக அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று அவரை பார்த்துவிட்டு அங்கேயே குளித்துள்ளான். அப்போது அந்த பகுதியில் பலத்த காற்று வீசியதின் காரணமாக எனது மகனின் சட்டை அருகில் இருந்த காற்றாலை மின்சார டிரான்ஸ்பார்மரில் சிக்கியுள்ளது.
சட்டையை எடுக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்து அவன் தூக்கி வீசப்பட்டுள்ளான். படுகாயமடைந்த அவனை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தேன். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தவமுத்து கடந்த 1-ந்தேதி இறந்தான். எனது மகன் இறப்பிற்கு முழு காரணம் எவ்வித பாதுகாப்பாற்ற காற்றாலை டிரான்ஸ்பார்மர் பகுதியும் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாததே காரணமாகும். எனவே எனது மகன் இறப்பிற்கு காரணமான காற்றாலை உரிமையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story