உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி சீமான் பேட்டி


உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி சீமான் பேட்டி
x
தினத்தந்தி 6 Jun 2019 11:15 PM GMT (Updated: 6 Jun 2019 7:11 PM GMT)

உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று சீமான் கூறினார்.

திருச்சி,

இந்திய மருத்துவத்தின் தரம் என்ன? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பேராசிரியர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களா?. தற்போது நீட்தேர்வு பயிற்சி கொடுக்கிறோம் என்று தமிழகத்தில் கல்வி மறைமுக வியாபார தலமாகி விட்டது.

இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. ஆனால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் அந்த கல்லூரிகளில் எங்கள் பிள்ளைகள் மருத்துவம் படிக்க முடியாத நிலை உள்ளது. இங்குள்ள மருத்துவ இடங்கள் வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. அவர்கள் மருத்துவம் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு மருத்துவம் பார்க்க சென்று விடுகிறார்கள். ஆகவே தமிழகத்தில் நீட்தேர்வு முறையே தேவையில்லை.

தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் முறையை உலகம் முழுவதும் தூக்கி எறிந்துவிட்டார்கள். அதிக பணம் கொடுப்பவர்கள் ஆளுங்கட்சி, கொஞ்சம் குறைவாக கொடுப்பவர்கள் எதிர்க்கட்சி என்ற நிலை தான் இருக்கிறது. தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, நீதிமன்றம், சி.பி.ஐ. போன்றவை தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளாக உள்ளன. ஆனால் மோடி பிரதமராக வந்தபிறகு, அந்த அமைப்புகள் தங்களது அதிகாரத்தை இழந்து விட்டன. எங்களை பொறுத்தவரை நாங்கள் ஆட்சி மாற்றத்துக்காக அரசியல் செய்யவில்லை. அடிப்படை மாற்றத்துக்கான அரசியல் செய்து வருகிறோம். வருகிற உள்ளாட்சி தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்.

Next Story