மாவட்ட செய்திகள்

திருச்சி-தஞ்சாவூர் இடையே ரெயில் போக்குவரத்தில் இன்று மாற்றம் + "||" + Transfer of train between Tiruchy-Thanjavur today

திருச்சி-தஞ்சாவூர் இடையே ரெயில் போக்குவரத்தில் இன்று மாற்றம்

திருச்சி-தஞ்சாவூர் இடையே ரெயில் போக்குவரத்தில் இன்று மாற்றம்
திருச்சி-தஞ்சாவூர் இடையே ரெயில் போக்குவரத்தில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி,

திருச்சி அருகே திருவெறும்பூருக்கும், சோழகம்பட்டிக்கும் இடையே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி ரெயில் போக்குவரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- *காரைக்கால்- திருச்சி பயணிகள் ரெயில் (வண்டி எண் 76851) தஞ்சாவூர்-திருச்சி இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது.


*திருச்சி-காரைக்கால் பயணிகள் ரெயில் (76854) திருச்சி-தஞ்சாவூர் இடையே சேவை கிடையாது.

*மன்னார்குடி-திருச்சி ‘டெமு’ பயணிகள் ரெயில் (76805) தஞ்சாவூர்-திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது.

*மயிலாடுதுறை-திருச்சி பயணிகள் ரெயில் (56113) தஞ்சாவூர்-திருச்சி இடையே இயக்கப்படாது.

சோழன் எக்ஸ்பிரஸ்

*மயிலாடுதுறை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (16233) திருச்சிக்கு 90 நிமிடங்கள் தாமதமாக வந்தடையும்.

* சென்னை-திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (16795) வருகிற வழித்தடத்தில் 35 நிமிடங்கள் தாமதமாகும்.

*காரைக்கால்-திருச்சி பயணிகள் ரெயில் (56711) வருகிற வழியில் 35 நிமிடங்கள் தாமதமாகும்.

*மாண்டியா-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (15120) திருச்சிக்கு 45 நிமிடங்கள் தாமதமாக வந்தடையும்.

*திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (16234) திருச்சியில் இருந்து பகல் 12.50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 30 நிமிடங்கள் தாமதமாக பகல் 1.20 மணிக்கு புறப்படும்.

மன்னார்குடி ரெயில்

*திருச்சி-காரைக்கால் பயணிகள் ரெயில் (76852) செல்லும் வழித்தடங்களில் 25 நிமிடங்கள் தாமதமாகும்.

*திருச்சி-மன்னார்குடி பயணிகள் ரெயில் (76806) செல்லும் வழியில் 25 நிமிடங்கள் தாமதமாகும்.

* திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (56114) செல்லும் வழியில் 25 நிமிடங்கள் தாமதமாகும்.

மேற்கண்ட தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.