மாவட்ட செய்திகள்

சிவகங்கை அருகே மயில்களை வேட்டையாடிய வாலிபர் கைது நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் + "||" + Near Sivagangai Peacock hunt Young man arrested

சிவகங்கை அருகே மயில்களை வேட்டையாடிய வாலிபர் கைது நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்

சிவகங்கை அருகே மயில்களை வேட்டையாடிய வாலிபர் கைது நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்
சிவகங்கை அருகே மயில்களை வேட்டையாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே வனத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தியபோது அவர், வேகமாக தப்பிச் சென்றார். பின்னர் அவரை துரத்திய போது அரண்மனைசிறுவயல் என்ற இடத்தில் தனது மோட்டார் சைக்கிள் மற்றும் அதில் இருந்த பையை விட்டு விட்டு தப்பியோடினார்.

இதையடுத்து வனத்துறையினர் அந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து அந்த பையை திறந்து பார்த்தனர். இதில் 6 மயில்கள் இறந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து வனச்சரக அலுவலர் கோபிநாத் தலைமையில் வனவர்கள் செல்லமணி, திருப்பதிராஜா, வனக்காப்பாளர்கள் மலைச்சாமி, தங்கசாமி, முருகேசன், வன காவலர் சந்திரபோஸ் ஆகியோர் தப்பியோடிய அந்த நபரை தேடினர். அப்போது அவர் மதுரை மாவட்டம் மேலூர் அருகே வேலாயுதம்பட்டி வனத்துறையினரிடம் சிக்கினார். அவரை பிடித்து விசாரித்த போது அவர் அந்த பகுதியைச் சேர்ந்த விஜயக்குமார்(வயது26) என்பது தெரிய வந்தது.

மேலும் அவர் இறைச்சிக்காக மயிலை வேட்டையாடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அரியானாவில் வாகன சோதனையில் காரில் இருந்து ரூ.1.33 கோடி பறிமுதல்
அரியானாவில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடந்த வாகன சோதனையில் காரில் இருந்து ரூ.1.33 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
2. கதவுகளை வெளிப்புறமாக பூட்டி 10 வீடுகளுக்கு தீ வைத்த 2 வாலிபர்கள் கைது
கதவுகளை வெளிப்புறமாக பூட்டி விட்டு 10 வீடுகளுக்கு தீ வைத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
3. சேந்தமங்கலம் அருகே, பால் பண்ணையில் லாக்கரை திருடிய 3 பேர் கைது
சேந்தமங்கலம் அருகே, பால் பண்ணையில் லாக்கரை திருடிய சம்பவத்தில் 8 மாதங்களுக்கு பிறகு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. கொல்லிமலை வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் கைது
கொல்லிமலை வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் கைது செய்யப்பட்டார்.
5. ரூ.2¾ கோடி வெளிநாட்டு கைக்கெடிகாரங்கள் பறிமுதல்; வாலிபர் கைது
பாங்காங்கில் இருந்து கடத்தி வந்த ரூ.2¾ கோடி வெளிநாட்டு கைக்கெடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாலிபர் கைது செய்யப்பட்டார்.