மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் 1,000 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி திட்டம்: முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார் + "||" + English Education Program in 1,000 Government Schools in Karnataka: Chief Minister Kumarasamy started

கர்நாடகத்தில் 1,000 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி திட்டம்: முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்

கர்நாடகத்தில் 1,000 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி திட்டம்: முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்
கர்நாடகத்தில் 1,000 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி திட்டத்தை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்.
பெங்களூரு,

கர்நாடகத்தில் 1,000 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி திட்ட தொடக்க விழா, புதிதாக 100 கர்நாடக பப்ளிக் பள்ளிகள் திறப்பு விழா, ஏற்கனவே செயல்பட்டு வரும் கர்நாடக பப்ளிக் பள்ளிகளில் மழலையர் (எல்.கே.ஜி.) வகுப்புகள் தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு ஆங்கில வழி கல்வி திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்து பேசியதாவது:-


போட்டி நிறைந்த உலகில் போட்டியை எதிர்கொள்ளதிறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நோக்கத்தில் 1,000 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன. ஏழை குடும்பங்களின் குழந்தைகளுக்கு அநீதி ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த ஆங்கில வழி கல்வி திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

இந்த ஆங்கில வழி கல்வி வழியை கர்நாடகத்தில் தீவிரமாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. தனிப்பட்ட முறையிலும் எனக்கு எதிராக விமர்சனம் செய்தனர். நானோ அல்லது பரமேஸ்வரோ கன்னடத்திற்கு எதிரானவர்கள் கிடையாது.

ஆங்கில வழி கல்வி மட்டுமின்றி தரமான கல்வியை அளிப்பது தான் அரசின் நோக்கமாகும். 1-ம் வகுப்பில் 30 குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள். இந்த எண்ணிக்கை கட்டுப்பாடு விதித்ததால், தனியார் பள்ளிகளுடன் கூட்டு சேர்ந்துவிட்டோம் என்று சொல்வது சரியல்ல.

அடுத்த ஆண்டு அதிக வகுப்புகளை தொடங்குவோம். இந்த வகுப்புகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலக விடுமுறையை 15-ல் இருந்து 10 ஆக குறைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

கல்வித்துறை என்னிடம் தான் உள்ளது. அதிகாரிகள் நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி பேசினார். இதில் கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கரூர் அருகே 1,100 ஆண்டுகள் பழமையான கிரந்த மந்திரக்கல்வெட்டு கண்டெடுப்பு
கரூர் அருகே 1,100 ஆண்டுகள் பழமையான கிரந்த மந்திரக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
2. பிரான்சில் வெயிலுக்கு 1,435 பேர் பலி
பிரான்சில் வெயில் தாக்கத்தினால் 1,435 பேர் பலியாகி உள்ளனர்.
3. கரூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,488 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ராஜஸ்தான் மாநில சிறுவன் உள்பட 4 பேர் கைது
கரூரில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,488 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. திருவாரூரில் இருந்து தேனிக்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
திருவாரூரில் இருந்து தேனிக்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
5. கர்நாடகாவில் தேசியக் கொடிக் கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உயிரிழப்பு
கர்நாடகாவில் தேசியக் கொடிக் கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.