மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் பொதுமக்களுக்கு அதிகாரி வலியுறுத்தல்


மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் பொதுமக்களுக்கு அதிகாரி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Jun 2019 10:15 PM GMT (Updated: 19 Jun 2019 7:40 PM GMT)

மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் பொதுமக்கள் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க செயற்பொறி யாளர் வலியுறுத்தி உள்ளார்.

அரியலூர்,

வெயில் காலம் முடிந்து தற்போது காற்று வீசி வருவதால் அதன்மூலம் மின்தடை ஏற்பட்டாலோ, மின்கம்பிகள் அறுந்து கிடந்தாலோ, மின் கம்பங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தாலோ, மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கிக்கொண்டு இருந்தாலோ இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்திற்கோ, கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் செல்போன் எண்களிலோ தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதைவிடுத்து மின் தடையை சரி செய்யும் பொருட்டு மின் கம்பத்திலோ, மின் மாற்றியிலோ ஏறி தனி நபர்கள் யாரும் பணி செய்யக்கூடாது. டிராக்டர் மற்றும் லாரிகளில் கரும்பு, வைக்கோல் போன்றவற்றை உயரமாக ஏற்றி செல்லும்போது வழியில் உள்ள மின்கம்பிகளில் உரசாமல் மிகவும் கவனமாக கொண்டு செல்ல வேண்டும். மின்பாதைக்கு அருகில் வீடு, கட்டிடம் கட்டும்போது மின்பாதையிலிருந்து போதிய இடைவெளி விட்டு கட்ட வேண்டும்.

தண்டனைக்குரிய குற்றம்

கோவில் திருவிழாக்களில் தேரோட்டம் நடப்பதற்கு முன்னதாக மின்வாரிய அலுவலகத்தில் உரிய அனுமதி பெறவேண்டும். இடி அல்லது மின்னலின் போது வெட்டவெளியில் யாரும் இருக்கக்கூடாது. ஆடு, மாடு போன்ற கால்நடைகளை மின்கம்பத்திலோ அல்லது இழுவை கம்பியிலோ கட்டுவதை தவிர்க்க வேண்டும். மின்வேலிகளை அமைப்பது அமைப்பவருக்கே மரணத்தை ஏற்படுத்தும். அது தண்டனைக்குரிய குற்றமும் ஆகும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

Next Story