சேலத்தில் பரிதாபம்: கிணற்றில் மூழ்கி மெக்கானிக் பலி சாவில் சந்தேகம் எனக்கூறி உறவினர்கள் சாலை மறியல்
சேலத்தில் மெக்கானிக் கிணற்றில் மூழ்கி பலியானார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கருப்பூர்,
சேலம் வெண்ணங்குடி முனியப்பன் கோவில் அருகே உள்ள தெய்வானை நகரை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 24). மெக்கானிக்கான இவர் அழகாபுரம் காட்டூர் பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடை வைத்துள்ளார். கோபிநாத் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றுக்கு தனது நண்பர்கள் 3 பேருடன் குளிக்க சென்றார்.
பின்னர் அவர்கள் 4 பேரும் கிணற்றுக்குள் இறங்கி குளித்தனர். அப்போது கோபிநாத் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சிராஜ் அல்வனீஸ் தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் உதவி கமிஷனர் செல்வராஜ், அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேல் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் கோபிநாத்தின் உறவினர்கள் அந்த பகுதிக்கு திரண்டு வந்தனர். இவர்களில் சிலர் ஆத்திரத்தில், கோபிநாத்துடன் குளிக்க சென்ற நண்பர்களை தாக்கினர். அப்போது அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.
இதற்கிடையில் தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி கோபிநாத்தின் உடலை வெளியே மீட்டு வந்தனர். இதையடுத்து அவருடைய உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பதற்காக ஆம்புலன்சில் ஏற்றினர். அப்போது கோபிநாத் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவருடைய உடலை காண்பிக்க கூறி உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஆம்புலன்சின் கண்ணாடியை சிலர் உடைக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீசார், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story