ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை: நிவாரணம் கேட்டு உறவினர்கள் சாலை மறியல்


ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை: நிவாரணம் கேட்டு உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 30 Jun 2019 4:30 AM IST (Updated: 30 Jun 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

உச்சிப்புளி அருகே வெட்டி கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவரின் உறவினர்கள் நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் பிரப்பன் வலசை ஆட்டோநிலையத்தில் கடந்த 21-ந் தேதி நொச்சியூரணியை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் ஆட்டோ டிரைவர் ஜோதிபாசுக்கும், அதே ஊரை சேர்ந்த காந்தி தலைவன் மகன் அறிவழகன், மனோகரன் மகன் விஷ்வா, மணி மகன் முத்து என்ற நாடிமுத்து ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதில் நடந்த அரிவாள் வெட்டில் ஜோதிபாசு படுகாயமடைந்தார். அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக அறிவழகன், விஷ்வா, முத்து ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மறியல்

இந்தநிலையில் நேற்று இறந்த ஜோதிபாசுவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ராமநாதபுரம்-ராமேசுவரம் ெநடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதில் ஜோதிபாசுவின் குடும்பத்திற்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும், குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், ஜோதி பாசு மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தகவலறிந்து வந்த உச்சிப்புளி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை சமரசபடுத்த முயன்றனர். ஆனால் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என கூறியதை தொடர்ந்து, ராமநாதபுரத்தில் இருந்து வந்த வருவாய்த்துறையினர் அவர்களிடம் சமரச பேச்சு நடத்தினர். அதன்பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மறியலால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த பகுதியில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.


Next Story