ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சை அருகே பொதுமக்கள் சாலை மறியல்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சை அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் இந்த திட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
சாலை மறியல், வயலில் இறங்கி போராட்டம், மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களிலும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்நிலையில் தஞ்சையை அடுத்த காட்டூர் பகுதியில் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தஞ்சை- மன்னார்குடி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது அவர்கள் ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஷேல் எரிவாயு உள்ளிட்ட திட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டு பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story