நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செந்துறை,
அரியலூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட கண்காணிப்பாளராக முன்னாள் அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜை தமிழக அரசு அண்மையில் நியமித்தது. அதனை தொடர்ந்து சரவணவேல்ராஜ் நேற்று அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் குடிநீர் திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அதன்படி கீழப்பழுவூர், கைகாட்டி, உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார். செந்துறை பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது இலங்கைச்சேரி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளான செல்வகுமார் சாந்தி ஆகியோர் மாவட்ட கண்காணிப்பாளர் சரவணவேல்ராஜிடம் புகார் மனுக்களை அளித்தனர். அதில், செந்துறை பெரிய ஏரிக்கு வரும் முக்கிய நீர் வழித்தடங்களை சிமெண்டு ஆலை நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பெருமளவில் ஆக்கிரமித்து பாதை மற்றும் வீடுகளாகவும், விவசாய நிலங்களாகவும் மாற்றி பயன்படுத்தி வருகின்றனர்.
முழுமையாக அகற்ற வேண்டும்
பெரிய ஏரிக்கு வரும் மழைநீர் தடைப்பட்டு கடந்த பல ஆண்டுகளாக ஏரி நிரம்பவில்லை. இதனால் செந்துறை பகுதியில் பெருமளவில் குடிநீர் தட்டுப்பாடும், விவசாயிகள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகின்றது. ஆகவே உடனடியாக செந்துறை பகுதியில் தனியார் சிமெண்டு ஆலைகள் மற்றும் தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ள நீர் வழித்தடங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். புகார் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சரவணவேல்ராஜ், அதிகாரிகளுடன் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Related Tags :
Next Story