நொய்யல் பகுதியில் இருந்து டேங்கர் லாரிகளில் வெளியிடங்களுக்கு தண்ணீர் விற்பனை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
நொய்யல் பகுதியில் இருந்து டேங்கர் லாரிகளில் வெளியிடங்களுக்கு தண்ணீர் விற்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று: பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நொய்யல்,
போதிய மழை இல்லாததால் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம் நொய்யல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காவிரி ஆறு மற்றும் புகழூர் ராஜவாய்க்கால் கரையோரம் உள்ள பகுதிகளில் விவசாய தேவைக்காக கிணறு மற்றும் ஆள்துளை கிணறுகளை பலர் அமைத்துள்ளனர்.
இதில் சிலர், விவசாய தேவைக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மற்றும் கிணறுகளில் உள்ள தண்ணீரை வர்த்தக நிறுவனங்களுக்கு விற்று வருகின்றனர். நொய்யல் மேல்நிலைப்பள்ளி அருகே, ரெயில்வே கேட், கணபதிபாளையம், வெள்ளியம்பாளையம், கோம்புபாளையம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து 24ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரிகளில் ஒரு லோடு தண்ணீர் ரூ.1,200 வீதம் விலைபேசி கரூர், ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் உள்ள எம்.சாண்ட் தயாரிக்கும் கிரஷர் நிறுவனங்கள், ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள், ஜவுளி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாள் ஒன்றுக்கு சுமார் 500 டேங்கர் லாரிகளில் வெளியிடங்களுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம், நொய்யல் பகுதியில் ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், நொய்யல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்கள், ஆள்துளை கிணறுகள் மற்றும் விவசாய கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் விவசாய பயிர்களும் காய்ந்து வருகின்றன.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளுக்கு புகார்கள் அனுப்பியதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி நிலத்தடி நீர்கோட்ட அதிகாரிகள் நொய்யல் பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், இன்று வரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால், இப்பகுதியில் இருந்து தண்ணீர் விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே, வெளியிடங்களுக்கு தண்ணீர் விற்பனையை தடுத்து பொதுமக்களையும், வேளாண் பயிர்களையும் காக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story