வெவ்வேறு பகுதிகளில் விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல்
வெவ்வேறு பகுதிகளில் விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி முன்னாள் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017-18 மற்றும் 2018-19-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 படித்து முடித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, இதுவரை தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் மாணவர்கள் பலமுறை முறையிட்டும் மடிக்கணினி வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த முன்னாள் மாணவர்கள் இலவச மடிக்கணினி கேட்டு கடந்த சில நாட்களாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் முன்பும், பிரதான சாலைகளிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மடிக்கணினி வழங்கக்கோரி முன்னாள் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ- மாணவிகள் மடிக்கணினி வழங்கக்கோரி பாலக்கரையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன் தலைமையிலான போலீசார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், தொடர் மறியலில் ஈடுபட்டு மடிக்கணினி வழங்கிட நடவடிக்கை கோரி முழக்கமிட்டனர். பின்னர், பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் மாரிமீனாள் பேச்சுவார்த்தை நடத்தி, 3 மாதத்தில் அனைவருக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து மாணவ- மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், பாலக்கரை பகுதியில் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, செட்டிக்குளம், அம்மாபாளையம், குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் அப்பள்ளிகள் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்தந்த பள்ளி நிர்வாகம் மற்றும் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து மறியல் போராட்டங்கள் கைவிடப்பட்டன.

Related Tags :
Next Story