கர்ப்பிணி பெண் சாவில் மர்மம்: உறவினர்கள் சாலை மறியல்
கும்பகோணத்தில் கர்ப்பிணி பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள எருமைப்பட்டி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பாக்கியலட்சுமி (வயது27). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் பாக்கியலட்சுமி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். 4 மாத கர்ப்பிணியாக இருந்த அவரை பார்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து பாலகிருஷ்ணன் ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் பாக்கியலட்சுமி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாக்கியலட்சுமியின் தாய் சாந்தி கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாக்கியலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பாக்கியலட்சுமியின் உடலை வாங்குவதற்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு நேற்று அவருடைய உறவினர்கள் வந்தனர். அவர்கள் பாக்கியலட்சுமியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் உதவி கலெக்டர் வீராச்சாமி, அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பாக்கியலட்சுமியின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உதவி கலெக்டர் உறுதி அளித்தார். அதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அப்பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story