மாயனூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
மாயனூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம்,
கரூர் மாவட்டம் மாயனூரை அடுத்த மாணிக்கபுரம், சின்ன கிணத்துப்பட்டி, மேலடை தெற்கு உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 3 மாதங்களாக காவிரிக்குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றுடன் கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் சேதமடைந்து இருப்பதால் அதில் குடிநீர் பிடிக்க முடியாத நிலை உள்ளது. மேலும் வசதியுள்ளவர்கள் காசு கொடுத்து டேங்கர் லாரிகளில் தண்ணீரை வாங்கி பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் பலகிலோ மீட்டர் தூரம் சென்று விவசாய கிணறுகளில் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். தினம், தினம் குடிநீருக்காக கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
சாலை மறியல்
குடிநீர் பிரச்சினையை தீர்க்க பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் நேற்று காலையில் கரூர் சேங்கல் சாலையில் மதுக்கரை என்ற இடத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கூடினர். பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவிரிக்குடிநீரை சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்சமயத்திற்கு குடிநீர்வடிகால் வாரியத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை டேங்கர் லாரிகளில் கொண்டு வந்து இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் சேகரித்து தடையின்றி வினியோகிக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சீர் செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். தகவல் அறிந்த மாயனூர் போலீசார், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் காவிரி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story