அரசு கலை கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்


அரசு கலை கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 July 2019 4:15 AM IST (Updated: 12 July 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரியில் குடி தண்ணீர் கிடைக்கவில்லை என்றும், கழிவறைக்கு தண்ணீர் வசதி இல்லாததால் கழிவறை சுத்தமாக இல்லை என்பன உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆவுடையார்கோவில்,

ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் இரு வேளைகளில் வகுப்புகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் கல்லூரியில் குடி தண்ணீர் கிடைக்கவில்லை என்றும், கழிவறைக்கு தண்ணீர் வசதி இல்லாததால் கழிவறை சுத்தமாக இல்லை என்பன உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு மாலை நேர வகுப்பிற்கு வந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்று இதே கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் ஆவுடையார்கோவில்-அறந்தாங்கி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி தாசில்தார் சூரியபிரபு, துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா, ஆவுடையார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உங்களது கோரிக்கை நிறைவேற்றி தரப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story