இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 July 2019 4:15 AM IST (Updated: 15 July 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

இந்து கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணி சார்பில் வேலாயுதம்பாளையம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேலாயுதம்பாளையம்,

இந்து கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணி சார்பில் வேலாயுதம்பாளையம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்து கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட பொருளாளர் குணசேகரன், கோட்டத்தலைவர் கனகராஜ், நகர செயலாளர் மதன்குமார் உள்பட இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி வேலாயுதம்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story