மாவட்ட செய்திகள்

வடுவூர் அருகே மாநில அளவிலான கைப்பந்து போட்டி அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார் + "||" + Minister of State-level volleyball tournament Kamaraj inaugurated

வடுவூர் அருகே மாநில அளவிலான கைப்பந்து போட்டி அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்

வடுவூர் அருகே மாநில அளவிலான கைப்பந்து போட்டி அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்
வடுவூர் அருகே மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் அரை இறுதி போட்டியை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.
வடுவூர்,

வடுவூர் அருகே உள்ள எடமேலையூர் கிராமத்தில் எடமேலையூர் விளையாட்டு கழகம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி இணைந்து மாநில அளவிலான கைப்பந்து போட்டியை நடத்தின. இதில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி, சத்யபாமா பல்கலைக்கழக அணி, பொள்ளாச்சி எஸ்.டி.சி. கல்லூரி அணி, திருச்சி சென்ஜோசப் கல்லூரி, சென்னை வைஷ்ணவா கல்லூரி, எடமேலையூர் விளையாட்டு கழக அணி ஆகிய 6 அணிகள் பங்கேற்றன.


அரை இறுதி போட்டி

தொடர்ந்து நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் எடமேலையூர் விளையாட்டு கழகம், சென்னை வைஷ்ணவா கல்லூரி, பொள்ளாச்சி எஸ்.டி.சி. கல்லூரி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி ஆகியவை மோதின. இந்த போட்டியை அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற சென்னை வைஷ்ணவா கல்லூரி அணியும், பொள்ளாச்சி எஸ்.டி.சி. கல்லூரி அணியும் இறுதி போட்டியில் மோதுகின்றன. இதில் எடமேலையூர் விளையாட்டு கழக தலைவர் செல்வமணி, செயலாளர் மேகநாதன், பொருளாளர் நல்லதம்பி, மன்னார்குடி நகர கூட்டுறவு வங்கி தலைவர் குமார், நீடாமங்கலம் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் அரிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.