கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கக்கோரி திருத்துறைப்பூண்டியில் கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்


கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கக்கோரி திருத்துறைப்பூண்டியில் கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 July 2019 4:00 AM IST (Updated: 19 July 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கக்கோரி திருத்துறைப்பூண்டியில் கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரியில் பாரதிதாசன் உறுப்புக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு அரசின் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு பஸ்கள் கல்லூரி வாசலில் நிற்காததை கண்டித்தும், கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வலியுறுத்தியும் நேற்று கல்லூரி அருகில் மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபு, ராஜா ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைதொடர்ந்து மாணவ-மாணவிகள் கலைந்து சென்றனர். இதனால் திருத்துறைப்பூண்டி-திருவாரூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story