தமிழகத்தில் “நீட்” தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் ஓய்வூதியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்


தமிழகத்தில் “நீட்” தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் ஓய்வூதியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 July 2019 4:15 AM IST (Updated: 25 July 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் “‘நீட்” தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என்று ஓய்வூதியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

மயிலாடுதுறை,

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநாடு மயிலாடுதுறையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பழனிவேலு, மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில தலைவர் ஸ்ரீதரன் கலந்து கொண்டு பேசினார்.

மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதியத்திற்கு வருமானவரி விலக்கு அளிக்க மத்திய அரசை கேட்டு கொள்வது. மத்திய அரசில் உள்ளது போல் மாநிலத்திலும் ஓய்வூதியர்களுக்கு என ஒரு தனித்துறையை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் “நீட்” தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க மத்திய அரசை கேட்டு கொள்வது. மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை மாற்றி அரசே அந்த பணியை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றுக்கு தினமும் விலை நிர்ணயம் செய்யும் நடைமுறையை உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட, வட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் திருஞானசம்பந்தம் நன்றி கூறினார்.

Next Story