சரணியாபுரம் கிராமத்தில் மயான கொட்டகை அமைத்து தர வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் மனு


சரணியாபுரம் கிராமத்தில் மயான கொட்டகை அமைத்து தர வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 31 July 2019 4:15 AM IST (Updated: 31 July 2019 12:07 AM IST)
t-max-icont-min-icon

சரணியாபுரம் கிராமத்தில் மயான கொட்டகை அமைத்து தர வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை கலெக்டர் அலுவலகத்தில் திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சி சரணியாபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்போது கலெக்டர் இல்லாததால் அலுவலகத்தில் உள்ள உதவி அலுவலரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சரணியாபுரம் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்களுக்கு சொந்தமான மயானம் அரசலாற்றங்கரையோரம் உள்ளது. இங்கு சிலர் இரவு நேரங்களில் ஆற்றின் கரைகளை வெட்டி மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். இந்த மயானத்திற்கு கொட்டகை அமைக்கப்படவில்லை. இதனால் மழை காலங்களில் யாராவது உயிரிழந்தால் அவர்களை தகனம் செய்ய சிரமமாக உள்ளது.

மயான கொட்டகை

இது சம்பந்தமாக பலமுறை தாசில்தாரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயான கொட்டகை அமைக்கவும், மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story