திருவாரூர் கோட்டத்தில் ரூ.12 கோடியே 79 லட்சத்தில் சாலை பணிகள்
திருவாரூர் கோட்டத்தில் ரூ.12 கோடியே 79 லட்சத்தில் நடைபெறும் சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனி ஆய்வு செய்தார்.
திருவாரூர்,
திருவாரூர் கோட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருச்சி கண்காணிப்பு பொறியாளர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ரூ.2 கோடியே 79 லட்சம் மதிப்பில் போடப்பட்ட குளிக்கரை-அம்மையப்பன் சாலையை பழனி பார்வையிட்டு தரத்தினை ஆய்வு செய்தார்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
அதனை தொடர்ந்து திருவாரூர் உட்கோட்டத்தில் நடைபெற்று வரும் ரூ.4 கோடியே 59 லட்சம் மதிப்பிலான மாநில சாலைகள், ரூ.1 கோடியே 96 லட்சம் மதிப்பில் நடைபெறும் மாவட்ட முக்கிய சாலைகள், ரூ.3 கோடியே 34 லட்சம் மதிப்பில் இதர சாலைகள் என ரூ.12 கோடியே 79 லட்சம் மதிப்பிலான சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது கோட்ட பொறியாளர் சிவக்குமார், உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரன், இளநிலை பொறியாளர் குமாரசெல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story