பெண்ணிடம் நூதன முறையில் நகை-பணம் திருட்டு


பெண்ணிடம் நூதன முறையில் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 13 Aug 2019 3:30 AM IST (Updated: 13 Aug 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் நூதன முறையில் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

சமயபுரம்,

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள 85 மேல சீதேவிமங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் குமார். கூலித்தொழிலாளி. இவரது மனைவி யோகாம்பாள்(வயது 45). இவர், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர், தான் ஒரு சக்தி கோவிலில் இருந்து வருவதாகவும் வீட்டில் உள்ள கஷ்டங்களை தீர்க்கக்கூடிய அரிய வகை எண்ணெய் இருப்பதாகவும் அதை நுகர்ந்து பார்க்குமாறு கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய யோகாம்பாள் அந்த எண்ணெயை நுகர்ந்து பார்த்தவுடன் மயக்கமடைந்தார். அதைத்தொடர்ந்து அந்த நபர், யோகாம்பாள் அணிந்திருந்த தங்க சங்கிலி, தோடு, மூக்குத்தி உள்ளிட்ட 2 பவுன் நகைகளை கழற்றி கொண்டும், வீட்டில் இருந்த ரூ.12 ஆயிரத்தை திருடிக் கொண்டும் நைசாக தப்பி ஓடி விட்டார். பின்னர் வீட்டுக்கு வந்த யோகாம்பாள் உறவினர்கள் இந்த சம்பவம் குறித்து சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் நூதன முறையில் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story