சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை


சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை
x
தினத்தந்தி 14 Aug 2019 11:00 PM GMT (Updated: 14 Aug 2019 6:53 PM GMT)

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற வேளாங் கண்ணி மாதா பேராலயம், நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில் ஆகியவை உள்ளன. இங்கு வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சுதந்திர தினம் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அசம்பாவிதம் ஏதும் நடக்காத வகையில் முன்எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நாகையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின்படி, நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் நாகை, வெளிப்பாளையம், நாகூர் உள்ளிட்ட நகர் பகுதிகளில் உள்ள ரெயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.

ஆய்வு

மேலும் நாகை மாவட்ட எல்லையான நாகூர் அருகே மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்அதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு நாகை ரெயில் நிலையத்திற்கு சென்று சுதந்திர தினவிழா பாதுகாப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

இதேபோல் காரைக்காலில் இருந்து வரும் பஸ், லாரி, கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் சோதனை செய்தனர்.

Next Story