தவணை முறை திட்டத்தில் வீட்டுமனை வழங்குவதாக மோசடி: ரியல் எஸ்டேட் அதிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


தவணை முறை திட்டத்தில் வீட்டுமனை வழங்குவதாக மோசடி: ரியல் எஸ்டேட் அதிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 19 Aug 2019 10:45 PM GMT (Updated: 19 Aug 2019 5:42 PM GMT)

தவணை முறை திட்டத்்தில் வீட்டுமனை வழங்குவதாக மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருவாரூர்,

சிவகாசி திருத்தங்கல் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாத தவணை முறையில் மனை வழங்கும் திட்டத்தை நடத்தினார். இந்த திட்டத்தில் எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மூலம் ரூ.2 லட்சத்து 69 ஆயிரம் கட்டியிருந்தேன். பணம் வசூல் செய்து விட்டு நிறுவன அலுவலகத்தை மூடி விட்டனர். எனவே மோசடியில் ஈடுபட்ட அந்த ரியல் எஸ்டேட் அதிபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து கட்டிய பணத்தை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

புகார்

இதே போல் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்பட மாவட்டம் முழுவதும் 60-க்கும் மேற்பட்டவர்கள் தவணை முறையில் வீட்டுமனை திட்டத்தில் பணத்தை கட்டி பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப பெற்று தர கோரி தனித்தனியே கோரிக்கை மனு அளித்தனர்.

இதனை தொடர்்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அந்த ரியல் எஸ்டேட் அதிபர் மீது புகார் மனு அளித்தனர். 

Next Story