திருமருகலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
திருமருகலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமருகல்,
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருமருகல் பஸ் நிலையம் எதிரே நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் ஜவஹர் தலைமை தாங்கினார். மாநில வணிகர் அணி துணை செயலாளர் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்ரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டக்காரர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு, அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் நாகை -நன்னிலம் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
அதேபோல வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை கைது செய்யக்கோரி கீழ்வேளூர் கடைத்தெருவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தொகுதி செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் குணா, வடக்கு ஒன்றிய செயலாளர் பாவேந்தன், மைய ஒன்றிய செயலாளர் பாண்டியன், நகர துணை செயலாளர் கோவேந்திரன், மாவட்ட துணை அமைப்பாளர் ராசு.தங்கையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story