மாவட்ட செய்திகள்

உத்திரமேரூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி + "||" + Car-motorcycle collision near Utremaru; Private company employee kills

உத்திரமேரூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி

உத்திரமேரூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி
உத்திரமேரூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
உத்திரமேரூர்,

புதுச்சேரியை சேர்ந்தவர் ஜியாவுதீன். இவரது மகன் சையத் இப்ராகிம் (வயது 35). இவர் உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இவர் தனது மோட்டார் சைக்கிளில் 2 நாட்களுக்கு முன்னர் உத்திரமேரூரை அடுத்த நல்லூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.


சாவு

இதில் பலத்த காயம் அடைந்த இப்ராகிமை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார்சைக்கிள்-லாரி மோதல்: தொழிலாளி சாவு ; மனைவி, மகன் படுகாயம்
பர்கூர் மலைக்கிராமத்தில் மோட்டார்சைக்கிளும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மனைவி, மகன் படுகாயம் அடைந்தனர்.
2. மங்கோலியாவில் பரிதாபம்: வீட்டில் தீப்பிடித்து 2 குழந்தைகள் பலி
மங்கோலியாவில் வீடு ஒன்றில் தீப்பிடித்த விபத்தில் சிக்கி 2 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர்.
3. சேலம் அருகே ஆம்னி பஸ்கள் மோதிய விபத்தில் நேபாள சுற்றுலா பயணிகள் 7 பேர் பலி
சேலம் அருகே நள்ளிரவில் ஆம்னி பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் நேபாள சுற்றுலா பயணிகள் 7 பேர் பலியானார்கள்.
4. லாரியை முந்தி செல்ல முயன்ற போது மண்மேட்டில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி
தஞ்சை அருகே லாரியை முந்தி செல்ல முயன்றபோது சாலையோரத்தில் இருந்த மண்மேட்டில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலியானார்.
5. பெண்ணின் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் மோசடி தபால் நிலைய ஊழியர் கைது
பெண்ணின் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மோசடி செய்த தபால் நிலைய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.