திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Sept 2019 4:00 AM IST (Updated: 24 Sept 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முன்பு நேற்று இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிப்காட்( ராணிப்பேட்டை),

சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முன்பு நேற்று இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் திலீபன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் முன்னறிவிப்பின்றி தேர்வு கட்டணம் உள்பட கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை கண்டித்தும், இதனால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே உடனே கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் தங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அனைத்து கல்லூரிகளிலும் போராட்டம் நடைபெறும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

பின்னர் இந்திய மாணவர் சங்கத்தினர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை துணைவேந்தர் தாமரைசெல்வியிடம் வழங்கி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பெருவழுதி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செந்தில்குமார், சிண்டிகேட் உறுப்பினர்கள் ஜெயராமன், தங்கராஜ் மற்றும் பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.

இதனை முன்னிட்டு வேலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் புகழ், மனோன்மணி உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Next Story