கள்ளக்காதலை கண்டித்ததால் பயங்கரம்: டிராக்டரை ஏற்றி விவசாயி படுகொலை மனைவி-கல்லூரி மாணவர் கைது
க.பரமத்தி அருகே மொபட்டில் சென்ற விவசாயி மீது டிராக்டரை ஏற்றி படுகொலை செய்யப் பட்ட சம்பவத்தில் கல் லூரி மாணவரான கள்ளக்காதலனுடன் மனைவி கைது செய் யப்பட்டார்.
க.பரமத்தி,
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே முடிகனம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 42). விவசாயியான இவரது மனைவி சித்ரா (35). இந்த தம்பதியினருக்கு கார்வேந்தன் என்ற மகன் உள்ளார். மனோ கரன் வசிக்கும் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (20). இவர் சின்னதாராபுரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரி யில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்தநிலையில் சுதாகருக்கும், சித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட் டது. இவர்கள் இருவரும் சகஜமாக பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது உறவை வளர்த்தனர்.
கொலை செய்ய திட்டம்
மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் மனோகரனுக்கு தெரியவந்தது. இதனால் அவர், சித்ராவை கண்டித்தார். மேலும் சுதாகருடன் தொடர்பை துண்டிக்க அறி வுறுத்தினார். ஆனால் சித்ரா வால் கள்ளக்காதலனை மறக்க முடியவில்லை. கணவரின் எச்சரிக்கையை மீறியும் சித்ரா தனது கள்ளக்காதலனுடன் தொடர்பை நீடித்து வந்தார். இதற்கு கணவர் தடையாக இருப்பதால் அவரை தீர்த்துக் கட்ட மனைவி சித்ராவும், அவரது கள்ளக்காதலன் சுதாகரும் முடிவு செய்தனர். இதைதொடர்ந்து மனோ கரனை கொலை செய்ய 2 பேரும் கடந்த 6 மாதமாக திட்டம் போட்டனர்.
டிராக்டரை ஏற்றி கொலை
இந்த நிலையில் க.பரமத்தி சந்தையில் பொருட்களை வாங்க மனோகரனை நேற்று முன்தினம் சித்ரா அனுப்பி வைத்தார். மேலும் இந்த தகவலை தனது கள்ளக் காதலனிடம் சித்ரா செல் போனில் தெரிவித்து, அவர் வரும் போது கொலை செய்து விடும் படி கூறினார். இதைதொடர்ந்து சுதாகர் தனது வீட்டில் இருந்து டிராக்டரை எடுத்துக் கொண்டு க.பரமத்தி சந்தை நோக்கி புறப்பட்டார். அப்போது சந்தையில் இருந்து மனோகரன் மொபட்டில் வீட் டிற்கு திரும்பி கொண்டிருந்தார். முடிகனம் கருப்புசாமி காடு அருகே வந்தபோது டிராக் டரை மொபட் மீது சுதாகர் மோதினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மனோகரன் மீது டிராக்டரை ஏற்றிவிட்டு வீட்டிற்கு திரும் பினார். இதற்கிடையில் படு காயத்துடன் உயிருக்கு போரா டிய மனோகரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக கரூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென் றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
2 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் க.பரமத்தி போலீசார் விரைந்து சென்று மனோகரனின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கொலையான மனோகரனை அவரது மனைவி சித்ராவும், கள்ளக்காதலன் சுதாகரும் திட்டம் போட்டு கொலை செய்தது தெரியவந்தது. மேலும் மனோகரனை கொலை செய்த பின் சித்ராவிடம் சுதாகர் தகவல் தெரிவித்ததும் உறுதியானது.
இதைத்தொடர்ந்து கள் ளக்காதலன் சுதாகர், சித்ரா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடை யில் சம்பவ இடத்தை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ் கரன், அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கல் யாண்குமார், க.பரமத்தி போலீஸ் நிலைய இன்ஸ் பெக்டர் ரமாதேவி நேற்று பார்வையிட்டனர். கள்ளக் காதலனுடன் சேர்ந்து கண வனை மனைவி தீர்த்துக்கட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story