முத்துப்பேட்டை அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க கோரி சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
முத்துப்பேட்டை அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க கோரி சாலை மறியல் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள பாண்டியில் விடுபட்ட 12வருவாய் கிராமங்களுக்கும்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள மருதவனம், ஆரியலூர், தில்லைவிளாகம், கீழநம்மங்குறிச்சி, உப்பூர், விளாங்காடு, கற்பகநாதர்குளம், பின்னத்தூர், எடையூர், வேப்பஞ்சேரி, குன்னலூர், கரையாங்காடு, கோவிலூர் உள்பட 12 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க கோரி அனைத்துக்கட்சி விவசாயிகள் நேற்று பாண்டி கடைத்தெருவில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முருகையன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன், காங்கிரஸ் வட்டார தலைவர் வடுகநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கம்யூனிஸ்டு விவசாய அணி செயலாளர் ஜோகநாதன், மார்க்சிஸ்ட் விவசாய அணி செயலாளர் வீரமணி, தி.மு.க. விவசாய அணி செயலாளர் மேட்டுக்கொட்டகம் சண்முகம், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், பாசனதாரர்கள் சங்க தலைவர் ஜீவானந்தம், த.மா.கா. மாநில கொள்கை பரப்பு செயலாளர் காமராஜ் உட்பட பல்வேறு கட்சியினர் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். சாலை மறியலால் அப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருத்துறைப்பூண்டி தாசில்தார் ராஜன்பாபு, வேளாண்மைதுறை இனை இயக்குனர் ரவீந்திரன், உதவி இயக்குனர் முரளிபாபு, வருவாய் ஆய்வாளர் கஜேந்திரன், முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னுச்சாமி, எடையூர் இன்ஸ்பெக்டர் சிவதாஸ் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பயிர்க்காப்பீடு குறித்து வேளாண்மைதுறையினர் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு வழங்கிய பட்டியலுக்கும் தற்பொழுது இன்சூரன்ஸ் கம்பெனி வெளியிட்டுள்ள பயனாளிகள் பட்டியலுக்கும் வித்தியாசம் உள்ளதை அதிகாரிகள் தரப்பில் ஒப்புக்கொண்டனர். அதன் அடிப்படையில் இன்னும் 15 நாட்களுக்குள் அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதன்பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story