மாவட்ட செய்திகள்

மூலவைகை ஆறு, ஓடைகளில் வெள்ளப்பெருக்கு - போக்குவரத்து பாதிப்பு + "||" + Mulavaikai river, streams flooding - Traffic impact

மூலவைகை ஆறு, ஓடைகளில் வெள்ளப்பெருக்கு - போக்குவரத்து பாதிப்பு

மூலவைகை ஆறு, ஓடைகளில் வெள்ளப்பெருக்கு - போக்குவரத்து பாதிப்பு
மூலவைகை ஆறு, ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடமலைக்குண்டு,

கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள மூலவைகை ஆறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதி மற்றும் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, முத்தாலம்பாறை, வருசநாடு உள்ளிட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதையொட்டி வருசநாடு , கடமலைக்குண்டு ஆகிய பகுதிகளில் மூலவைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

தொடர்ந்து வெள்ளிமலை வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதேபோல கனமழை காரணமாக மயிலாடும்பாறை அருகே சிறப்பாறை ஓடை, கருப்பையாபுரம் ஓடை மற்றும் கடமலைக்குண்டுவில் பாலூத்து ஓடை, கன்னிமார்கோவில் ஓடை உள்ளிட்டவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிறப்பாறை ஓடை முத்தாலம்பாறை-மயிலாடும்பாறை பிரதான சாலையின் குறுக்கே நேருஜிநகர் என்ற கிராமம் அருகே செல்கிறது. இந்த பகுதியில் தரைப்பாலம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. எனவே நேற்று காலை சிறப்பாறை ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக முத்தாலம்பாறை சாலையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

வெள்ளப்பெருக்கு காரணமாக பஸ் மற்றும் கல்லூரி வாகனங்கள் சிறப்பாறை மற்றும் தங்கம்மாள்புரம் கிராமங்கள் வழியாக மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. கடந்த சில நாட்களாக வெயில் அதிக அளவில் இருந்து வந்த நிலையில் தற்போது கனமழை பெய்து மூலவைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர பகுதி மக்களுக்கு அபாய எச்சரிக்கை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காவிரி கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை: குற்றாலத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு மணிமுத்தாறு அருவியிலும் தண்ணீர் கொட்டுகிறது
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, குற்றாலத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவியிலும் தண்ணீர் கொட்டுகிறது.
3. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை: குற்றாலத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, குற்றாலத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவியிலும் தண்ணீர் கொட்டுகிறது.
4. குற்றாலத்தில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு காட்டாற்றில் அடித்து வரப்பட்ட காட்டுப்பன்றி ஐந்தருவியில் விழுந்து சாவு
குற்றாலம் அருவிகளில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காட்டாற்றில் அடித்து வரப்பட்ட காட்டுப்பன்றி ஐந்தருவியில் விழுந்து செத்தது.
5. குற்றாலத்தில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு காட்டாற்றில் அடித்து வரப்பட்ட காட்டுப்பன்றி ஐந்தருவியில் விழுந்து சாவு
குற்றாலம் அருவிகளில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காட்டாற்றில் அடித்து வரப்பட்ட காட்டுப்பன்றி ஐந்தருவியில் விழுந்து செத்தது.

ஆசிரியரின் தேர்வுகள்...