செங்கிப்பட்டியில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


செங்கிப்பட்டியில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 Oct 2019 4:15 AM IST (Updated: 9 Oct 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

செங்கிப்பட்டியில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று செங்கிப்பட்டி பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கந்தர்வக்கோட்டை-செங்கிப்பட்டி சாலையில் குடிநீர் வழங்கக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தங்கள் பகுதிக்கும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். குடிநீரை தட்டுப்பாடின்றி வினியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷம் எழுப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story