திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்ட கொள்ளை கும்பல் தலைவன் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண்


திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்ட கொள்ளை கும்பல் தலைவன் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 12 Oct 2019 5:00 AM IST (Updated: 12 Oct 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கொள்ளை கும்பல்தலைவன் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

பெங்களூரு,

திருச்சி சத்திரம் பஸ்நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடை உள்ளது. கடந்த 2-ந்தேதி அதி காலை இந்த கடை யின் பின் பக்க சுவ ரில் துளை போட்டு ரூ.12 கோடியே 41 லட் சம் மதிப் புள்ள தங்க நகை களை மர்ம நபர் கள் கொள் ளை ய டித்து சென் ற னர். இது குறித்து விசா ரணை நடத்த போலீஸ் கமி ‌‌ஷ னர் அமல் ராஜ் உத் த ர வின் பே ரில் 7 தனிப் ப டை கள் அமைக் கப் பட்டு விசா ரணை நடை பெற்று வந் தது.

இதற் கி டையே திரு வா ரூர் விள மல் பகு தி யில் நடந்த வாகன சோத னை யில் திரு வா ரூர் மடப் பு ரத்தை சேர்ந்த மணி கண் டன் (வயது 34) என் ப வரை போலீ சார் பிடித் த னர். அப் போது அவ ரி டம் லலிதா ஜூவல் ல ரி யில் கொள் ளை ய டிக் கப் பட்ட 5 கிலோ தங்க நகை கள் இருந் தன. விசா ர ணை யில் திரு வா ரூர் சீராத் தோப்பை சேர்ந்த முரு கன் (45), அவ ரது அக் காள் மகன் சுரே‌‌ஷ் (28) உள் பட 8 பேர் கொண்ட கும் பல் லலிதா ஜூவல் லரி நகைக் கடை கொள் ளை யில் ஈடு பட் டது தெரி ய வந் தது. இதை ய டுத்து வாகன சோத னை யில் பிடி பட்ட மணி கண் டன், தலை ம றை வான சுரே ‌ஷின் தாய் கன க வள்ளி ஆகி யோரை கைது செய்து சிறை யில் அடைத் த னர்.

கொள்ளை கும் பல் தலை வ னான முரு கன் மற் றும் கூட் டாளி சுரேஷை பிடிக்க தீவிர தேடு தல் வேட்டை நடத் தி னார் கள். ஆந் திரா, கர் நா டகா உள் ளிட்ட மாநி லங் க ளி லும், தமி ழ கத் தில் பல் வேறு மாவட் டங் க ளி லும் தனிப் படை போலீ சார் முகா மிட்டு தேடி வந் த னர்.

இந் த நி லை யில் திரு வண் ணா மலை செங் கம் கோர்ட் டில் நேற்று முன் தி னம் சுரே‌‌ஷ் சரண் அடைந் தார். அவரை 5 நாட் கள் நீதி மன்ற காவ லில் வைக்க நீதி பதி உத் த ர விட் டார். இதை ய டுத்து நேற்று முன் தி னம் நள் ளி ரவு சுரே‌‌ஷ் திருச்சி மத் திய சிறை யில் அடைக் கப் பட் டார். அவரை 10 நாட் கள் போலீஸ் காவ லில் எடுத்து விசா ரிக்க செங் கம் கோர்ட் டில் திருச்சி போலீ சார் மனு தாக் கல் செய் துள் ள னர்.

இதற் கி டையே திருச்சி திரு வெ றும் பூ ரில் வேங் கூர் அருகே நறுங் கு ழல் நா யகி நகர் என்ற பகு தி யில் உள்ள ஒரு வீட்டை வாட கைக்கு எடுத்து முரு கன் தங்கி இருந் த தாக போலீ சா ருக்கு ரக சிய தக வல் கிடைத் தது. இதை ய டுத்து தனிப் படை போலீ சார் அங்கு சென்று முரு கன் தங்கி இருந்த வீட் டில் சோதனை நடத் தி னார் கள். ஆனால் அங்கு கொள் ளை ய டிக் கப் பட்ட நகை கள் இல்லை. இது குறித்து விசா ரித் த போது, கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தான் முரு கன் அந்த வாடகை வீட் டில் மனைவி மற் றும் குழந் தை க ளு டன் வசித்து வந் துள் ளார். மேலும், அந்த வீட் டில் 2 கார் கள், பஞ்சு மெத் தை யு டன் கூடிய படுக்கை அறை, 3 ஏ.சி.க்க ளு டன் அவர் சகல வச தி க ளு டன் வசித்து வந் தது தெரி ய வந் தது.

முரு கன் தின மும் இரவு நேரத் தில் தனது வளர்ப்பு நாயு டன் அவர் தங்கி இருந்த வீட் டின் அருகே நடை ப யிற்சி சென் றுள் ளார். அப் போது யாரா வது அவ ரி டம் பேச்சு கொடுத் தால் நன் றாக பேசு வா ராம். சமீ பத் தில் பெய்த மழை யால் அந்த சாலை சேதம் அடைந்து இருந் துள் ளது. முரு கன் தனது செல வி லேயே சாலையை சீர மைத்து தரு வ தாக அந்த பகு தி யி ன ரி டம் கூறி உள் ளார். மேலும், தான் தங்கி இருந்த வீட் டில் ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தி உள் ளார். அந்த பெண் ணுக்கு முரு கன் ரூ.10 ஆயி ரம் சம் ப ளம் வழங் கி ய தும் தெரி ய வந் தது.

இதை ய டுத்து முரு க னுக்கு வீட்டை ரூ.6 ஆயி ரம் மாத வாட கைக்கு விட்ட அப் துல் கா தர் என் ப வ ரி டம் போலீ சார் விசா ரணை நடத் தி ய போது, கடந்த 1-ந்தேதி முரு கன் அந்த வீட்டை காலி செய்து விட்டு சென்று விட் ட தா க வும், போகும் போது தன் னி டம் சொல் லா மல் சாவியை பக் கத்து வீட் டில் கொடுத்து விட்டு போய் விட் ட தா க வும் அவர் போலீ சா ரி டம் தெரி வித் துள் ளார்.

ஆயு த பூஜை தினத் தில் முரு கன் திரு வெ றும் பூர் அருகே தான் தங்கி இருந்த வாடகை வீட் டுக்கு வந்து பூஜையை கொண் டா டி ய தா க வும், அப் போது தனது வீட் டில் வேலை செய்த பெண் ணுக்கு ரூ.1,000-மும், இனிப் பும் வழங் கி விட்டு இனி மேல் வேலைக்கு வர வேண் டாம் என்று கூறி ய தா க வும் தெரி கிறது.

முரு கன் செல் போன் பயன் ப டுத் தா த தால் அவர் எங்கே பதுங்கி இருக் கி றார் என் பதை கண் டு பி டிப் ப தில் போலீ சா ருக்கு சிர மம் ஏற் பட் டது. தொடர்ந்து பல் வேறு மாவட் டங் க ளுக் கும் தனிப் படை போலீ சார் சென்று அவரை தேடிவந்தனர்.

இந் த நி லை யில் போலீ சா ரால் தேடப் பட்டு வந்த முரு கன் நேற்று காலை 10.30 மணி அள வில் தனது வக் கீ லு டன் பெங் க ளூரு எம்.ஜி.ரோடு அருகே மேயோ ஹாலில் உள்ள பெங் க ளூரு மெட்ரோ பாலிட் டன் 11-வது கூடு தல் மாஜிஸ் தி ரேட்டு கோர்ட் டுக்கு வந் தார். அங்கு நீதி பதி நாகம்மா முன் னி லை யில் அவர் கோர்ட் டில் சரண் அடைந் தார்.

அப் போது நீதி ப தி யி டம், முரு கன் மீது கடந்த 2014-ம் ஆண்டு பெங் க ளூரு பான சா வடி போலீஸ் நிலை யத் தில் ஒரு திருட்டு வழக்கு பதி வாகி உள் ள தா க வும், அந்த வழக்கு தொடர் பாக அவர் சரண் அடைந்து இருப் ப தா க வும் தெரி விக் கப் பட் டது.

இதை ய டுத்து முரு கனை 14 நாட் கள் நீதி மன்ற காவ லில் வைக்க நீதி பதி நாகம்மா உத் த ரவு பிறப் பித் தார். இதை ய டுத்து கோர்ட் டில் இருந்து பலத்த பாது காப் பு டன் முரு கனை போலீ சார் அழைத்து சென்று பரப் பன அக் ர ஹாரா சிறை யில் அடைத் த னர். பெங் க ளூரு பரப் பன அக் ர ஹாரா சிறை யில் அடைக் கப் பட் டுள்ள முரு கனை லலிதா ஜூவல் லரி நகைக் கடை கொள்ளை வழக்கு தொடர் பாக திருச்சி போலீ சார் காவ லில் எடுத்து விசா ரிக்க நட வ டிக்கை எடுத்து வரு கி றார் கள். இதே போல் பான சா வடி போலீ சா ரும் முரு கனை காவ லில் எடுத்து விசா ரிக்க முடிவு செய் துள் ள னர்.

லலிதா ஜூவல் லரி கொள்ளை வழக் கில் முக் கிய கொள் ளை யர் க ளான முரு கன், சுரே‌‌ஷ் ஆகி யோர் கோர்ட் டில் சரண் அடைந்து இருப் பது இந்த வழக்கில் திடீர் திருப் பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story