நாகை பகுதிகளில் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது ரூ.9 லட்சம் நகைகள் பறிமுதல்


நாகை பகுதிகளில் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது ரூ.9 லட்சம் நகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 Oct 2019 4:30 AM IST (Updated: 18 Oct 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

நாகை பகுதிகளில் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.9 லட்சம் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை பறிப்பு நடந்தது. இதில் ஈடுபட்டவர்களை பிடிக்க நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

2 பேர் கைது

அப்போது தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் மதுரையை சேர்ந்த அஜித்குமார் (வயது 28), விஜய் (22) ஆகியோர் நாகை பகுதிகளில் பல்வேறு இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அஜித்குமார், விஜய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.9 லட்சம் மதிப்பிலான 25 பவுன் நகைகள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாராட்டு

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை நாகூர் போலீஸ் நிலையத்திற்கு தனிப்படை போலீசார் கொண்டு வந்தனர். இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் பார்வையிட்டு, நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.


Next Story