மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை,
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு கீழ்க்காணும் தமிழக அரசின் மாநில விருதுகள், மாற்றுத்திறனாளிகள் தினமான வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதி சென்னையில் வழங்கப்படுகிறது. சிறந்த பணி யாளர், சுயதொழில் புரியும் கை, கால் பாதிக்கப்பட்டோர், பார்வை திறன் பாதிக்கப்பட்டோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், அறிவுசார் குறைபாடுடையோர் மற்றும் தொழுநோயால் குணமடைந்தோருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
மேலும் பார்வையற்றோருக்கு கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர், செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர், அறிவுசார் குறைபாடுடையோருக்கு கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர், சிறந்த சமூக பணியாளர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் செவிதிறன் குறைந்தோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் அறிவுசார் குறைபாடுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுனர், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய நடத்துனர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், பேச்சு மற்றும் மொழிதிறன் குறைபாடு, புற உலகு சிந்தனையற்றோர் மற்றும் குறிப்பிட்ட கற்றல் இயலாமை, மனநலம் பாதிக்கப்பட்டோர், ரத்த உறையாமை அல்லது ரத்த சோகை, நாட்பட்ட நரம்பியல் பாதிப்பு, திசு பன்முக கடினமாதல் மற்றும் நடுக்குவாதம், பல்வகை ஊனம் ஆகியவற்றால் பாதிக்கப் பட்டோருக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.
விருதுகளை பெற புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று நாளைக்குள் (திங்கட்கிழமை) விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story