துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நெல்லை வருகை


துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நெல்லை வருகை
x
தினத்தந்தி 4 Nov 2019 10:15 PM GMT (Updated: 4 Nov 2019 6:26 PM GMT)

நாங்குநேரியில் அ.தி.மு.க. சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக துணைமுதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நெல்லை வருகிறார்.

நெல்லை,

தமிழகத்தில் நடந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடத்தப்படுகிறது.

நாங்குநேரி தொகுதிக்கான நன்றி அறிவிப்பு கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாங்குநேரியில் மாலை 5 மணிக்கு நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரையில் இருந்து கார் மூலம் நெல்லை வருகிறார். அவருக்கு நெல்லை மாவட்ட எல்லையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

இந்த கூட்டத்தையொட்டி நாங்குநேரியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. கூட்டத்தில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், ராஜலட்சுமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

Next Story