மாவட்ட செய்திகள்

போலீஸ்-பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்துவேன் புதிதாக பொறுப்பேற்ற சூப்பிரண்டு பேட்டி + "||" + Interview with the newly appointed Superintendent of Police and Public Relations

போலீஸ்-பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்துவேன் புதிதாக பொறுப்பேற்ற சூப்பிரண்டு பேட்டி

போலீஸ்-பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்துவேன் புதிதாக பொறுப்பேற்ற சூப்பிரண்டு பேட்டி
போலீஸ்- பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்துவேன் என்று புதிதாக பொறுப்பேற்ற சூப்பிரண்டு செல்வநாகரெத்தினம் கூறினார்.
நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ராஜசேகரன் சென்னை வடக்கு போக்குவரத்து துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் கடலோர பாதுகாப்பு குழும சூப்பிரண்டாக பணியாற்றிய செல்வநாகரெத்தினம் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று நாகை போலீஸ் சூப்பிரண்டாக அவர் பொறுப்பேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


கட்டுக்குள் கொண்டு வருவேன்

போலீஸ்-பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்துவேன். நாகை மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள், பொதுமக்கள் பிரச்சினைகள், சமூக பிரச்சினைகள் ஆகியவற்றை கண்காணித்து மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீர் குலைவு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் நிலவும் பிரச்சினைகளை கண்காணித்து, திட்டமிட்டு அதை கட்டுக்குள் கொண்டு வருவேன். மாவட்டத்தில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க பொதுமக்கள் எந்த நேரமும் எனது தொலைபேசி எண் 9498111498-ஐ தொடர்பு கொள்ளலாம். மாவட்டத்தில் பணியாற்றும் மற்ற காவல்துறை நண்பர்களுடன் இணைந்து திறம்பட பணியாற்றுவேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய சுற்றுப்பயணத்தில் வர்த்தக ஒப்பந்தம் உறுதி செய்யப்படலாம்; அதிபர் டிரம்ப் பேட்டி
இந்திய சுற்றுப்பயணத்தில் இரு நாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்று உறுதி செய்யப்படலாம் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
2. ஆன்மிக அரசியலுக்கு ஆதரவு இருப்பதால் நடிகர் ரஜினிகாந்த் முதல்-அமைச்சர் ஆவார் அர்ஜூன் சம்பத் பேட்டி
ஆன்மிக அரசியலுக்கு ஆதரவு இருப்பதால் நடிகர் ரஜினிகாந்த் முதல்-அமைச்சர் ஆவார் என்று மயிலாடுதுறையில், அர்ஜூன் சம்பத் கூறினார்.
3. பயனற்ற ஆழ்துளை கிணறுகளை ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து மூட வேண்டும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி
பயனற்ற ஆழ்துளை கிணறுகளை ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து மூட வேண்டும் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
4. நடிகர் விஜய்க்கு ஆதரவாக இருப்போம் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் பேட்டி
நடிகர் விஜய்க்கு ஆதரவாக இருப்போம் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் பேட்டி.
5. 9, 10-ம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது முதல்-அமைச்சர் பேட்டி
9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.